13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர்.. சாகும் வரை சிறை என தீர்ப்பு..!

Mahendran

செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (10:53 IST)
13 வயது எட்டாம் வகுப்பு படித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு சாகும் வரை சிறை தண்டனை என கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி கடந்த 2019 ஆம் ஆண்டு முதியவர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 
இந்த சம்பவத்தில் ஷேக் பாவா என்ற அந்த முதியவர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்றது. மேலும், சிறுமி கர்ப்பமாக இருந்ததும் தெரிய வந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
 
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஷேக் பாவாவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்