நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த வடக்கு பொய்கை நல்லூர் என்ற பகுதியில் இன்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில், தீ மிதிக்க தயங்கியபடி ஒரு பெண் நின்று கொண்டிருந்த நிலையில், அந்த பெண்ணை ஒரு முதியவர் தூக்கி சென்று தீ மிதிக்க தொடங்கினார்.
அப்போது அவர் செல்லும் வழியில் திடீரென தடுமாறி கீழே விழுந்ததால், முதியவர் மற்றும் பெண் ஆகிய இருவரும் தீக்காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.