அந்த பெண்ணுக்கு 16 வயதான ஒரு மகள் 10-ம் வகுப்பு தேர்வை முடித்திருந்த நிலையில், சிறுமி தனியாக வீட்டில் இருந்தபோது வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த சிறுமி தனது தாயிடம் சம்பவத்தை அழுதபடி கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்த பெண் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் சிவ பிரகாசம், குற்றவாளியின் தகவல்களை சேகரித்து தேடல் நடவடிக்கையை தொடங்கினார்.
இதேவேளை, சிறுமி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனையில், பாலியல் வன்கொடுமை நடந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, பதுங்கியிருந்த அந்த நபர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.