புது செல்போன்களை கொண்டு சென்ற கண்டெய்னரை மர்ம கும்பல் திருடிச் சென்ற சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவிலிருந்து பெங்களூருக்கு கண்டெய்னர் ஒன்றில் ரூ.3 கோடி மதிப்புடைய 5,140 செல்போன்கள் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் அருகே வந்தபோது கண்டெய்னர் மாயமானது.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை செய்த நிலையில் திருட்டு கும்பல் ஒன்று மொத்த கண்டெய்னரில் உள்ள செல்போன்களையும் திருடியுள்ளதும், அதற்கு டிரைவரும் உடந்தை என்றும் தெரிய வந்தது.
இந்த வழக்கில் டிரைவர் ராகுலை பிடித்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு மேலு 7 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 56 மொபைல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருடிய மொபைல்களை வெவ்வேறு மாநிலங்களில் மொத்தமாக 300, 400 பாக்ஸ்களாக உள்ளூர் கடைகளில் விற்றுள்ளனர். மொபைல் போன்களின் ஐஎம்இஐ எண்ணை வைத்து அவற்றை முடக்கி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Edit by Prasanth.K