இந்த சந்திப்பின் போது கூட்டணி குறித்தும் , விஜயகாந்தின் உடல்நிலை குறுத்தும் விசாரித்து அறிந்ததாகவும், வரும் நாளைமறுநாள் நடக்கவுள்ள மெகா கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தேமுதிகவும் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தாக் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்ததாகக் கூறினார் ஓ. பன்னீர் செல்வம்.
ஆனால் தேமுதிகவுக்கு 7 தொகுதிகள் கொடுத்தால், ஏற்கனவே பாமக :7 , பாஜக :5, புதிய தமிழகம் ; 1, போன்ற கட்சிகளுக்கு ஒதிக்கிய தொகுதிகள் போக அதிமுக . 19 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்பதால் தற்போது அக்கட்சி பலமாக யோசித்து வருவதாக தெரிகிறது.
இந்த சந்திப்பின் போது , தேமுதிகவில் பிரேமலதா விஜயகாந்த், சுதீஸ் ஆகியோர் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.