’அவர்கள் ‘இருட்டில் தனியாக போக பயந்தவர்கள் : தினகரன் குற்றச்சாட்டு

திங்கள், 4 மார்ச் 2019 (17:34 IST)
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என  அதிமுக - அமமுகவும்  டெல்லி நீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கி இருந்தனர். இந்நிலையில் கடந்த வாரத்தில் நீதிபதிகள் வெளியிட்ட தீர்ப்பு அதிமுகவுக்கு சாதகமாக அமைந்தது. ஆனால் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத அமமுக கட்சியினர் குறிப்பாக தினகரன் இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று சாத்தூரில் செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:
 
நாங்கள் அமமுகவை இன்னமும் பதிவு செய்யாமல் இருப்பதற்குக் காரணம் இரட்டை இலை சின்னத்தையும், அக்கட்சியையும் மீட்பதற்க்குத்தான். தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரவுடி மாதிரி பேசுவதாக தெரிவித்தார்.
மெகா கூட்டணி குறித்து கூறியபோது, தனியாக போக பயந்தவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குக் கூட்டணி வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்