அரசு ஊழியர்களின் 6 நாள் சம்பளம் பிடித்தம்: சட்டசபையில் அவசர சட்டம்

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2020 (07:14 IST)
அரசு ஊழியர்களின் 6 நாள் சம்பளம் பிடித்தம்
கொரோனா நிவாரண நிதிக்காக கேரள அரசு ஊழியர்களின் 6 நாள் ஊதியத்தை பிடித்தம் செய்வதற்கான அவசர சட்டம் கேரள மாநில சட்டசபையில் நிறைவேறியதால் அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஏற்கனவே அடுத்த 5 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 6 நாட்களுக்கான அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என, கேரள அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளன. 
 
இந்த நிலையில் கேரள அரசு ஊழியர்களின் ஊதிய பிடித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது' என, கேரள ஐகோர்ட் நேற்று முன்தினம் உத்தரவிட்டதை அடுத்து, நேற்று கேரள அமைச்சரவை கூடி, அடுத்த 5 மாதங்களுக்கு, அரசு ஊழியர்களின் 6 நாள் ஊதியம் பிடித்தம் செய்வதற்கான அவசர சட்டம் தொடர்பான தீர்மானம், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
 
இதனையடுத்து இந்த தீர்மானம் ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆளுனர் ஒப்புதல் அளித்தவுடன் இம்மாதம் முதல் அதாவது ஏப்ரல் மாத ஊதியத்தில், 6 நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்