இந்த ஆண்டு பருவமழை எப்படி இருக்கும் ? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

புதன், 29 ஏப்ரல் 2020 (16:01 IST)
இந்தியாவில் இந்த ஆண்டு பருவமழை எப்படி இருக்கும் என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்,தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தத்து தொடங்கும். தென் மேற்கு பருவமழை மே கடைசி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என தெரிவித்துள்ளது.

வட மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், மகாராஷ்டிராவில்  கடந்த ஆண்டை விட நல்ல மழை பெய்யும் எனவும். அதேபோல மேற்கு வங்காளம், மிசோரம், ஒடிசா போன்ற மாநிலங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இரு பருவமழை காலத்திலும் நாடு முழுவதும் சராசரி மழையை எதிர்பார்க்கலாம் என்று

கேரளா மற்றும் தமிழகத்தில் வழக்கமாகப் பெய்யும் மழையைவிட அதிகபட்சமான மழை பெய்யும்.தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மிக அதிக மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்