மக்களவை தேர்தலில் கிடைத்த வெற்றியை பிரதிபலிக்கும் வகையில் விரைவில் நடைபெறவுள்ள நான்கு மாநில சட்டசபை தேர்தலில் செயல்பட்டால், தேசிய அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.
டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில், பேசிய அவர், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்தார். மத்திய பட்ஜெட்டில், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர் என்றும் பல முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நாட்டில் வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக கோடிக்கணக்கான குடும்பங்கள் அவதிப்படும் நிலையில், மத்திய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது என்று அவர் வேதனை தெரிவித்தார். மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து மோடி அரசு சரியான பாடம் கற்கும் என நினைதோம், மாறாக, சமூகங்களை பிரித்து அச்சம் மற்றும் விரோத போக்கு கொள்கையை தொடர்ந்து பின்பற்றுகின்றனர் என்று அவர்
ஜம்முவில் மட்டும் கடந்த சில வாரங்களில் 11 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் பாதுகாப்பு படை வீரர்கள், அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் சோனியா குறிப்பிட்டார். உலகின் பல நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, மணிப்பூர் சென்று, இயல்பு நிலையை கொண்டு வருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த மறுக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இன்னும் சில மாதங்களில் நான்கு மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது என்றும் மக்களவை தேர்தலில் நமக்காக ஏற்படுத்தப்பட்ட வேகத்தையும் , நல்லெண்ணத்தையும் தக்க வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.