மருத்துவர்களுக்கு 4 மாத முன் சம்பளம் ! ஒடிஷா முதல்வர்அறிவிப்பு !!

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (17:09 IST)
மருத்துவர்களுக்கு 4 மாத முன் சம்பளம் ! ஒடிஷா முதல்வர் பட்நாயக் அறிவிப்பு !!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் இதுவரை 4,22,759 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 18,902 பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட் என்ற கொரோனா வைரஸ் 200 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா பாதிக்கபட்டவர்களில் 9,102 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய அளவில் சுமார் 3 லட்சம் பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் 600 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. 10 பேர் பலியாகியுள்ளனர். 40 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 5 பேருக்கு பாதிப்பட்டுள்ளதாகவும்,,ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் குணமடைந்துள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஒடிஷாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. அவர்கள் கடந்த நாட்களில் சென்ற இடங்களில் தொடர்பு கொண்ட நபர்களுடன் போலீஸார் கண்டறிந்துவருகின்றனர்.

மேலும் அங்கு 7 பேருக்கு மேல் கூட தடைவிதித்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முதல்மாநிலம் ஒடிஷா தான்.

இந்நிலையில், ஒடிசாவில் மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பணமாக வழங்கப்படும் என முதல்வர் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்