இந்தியாவில் கொரோனா: 24 மணி நேர நிலவரம்!!

Webdunia
செவ்வாய், 5 மே 2020 (16:38 IST)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 195 பேர் உயிரிழந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது கட்டமாக மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 46,433 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,568 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 12,727 ஆக உயர்ந்துள்ளது.
 
இதில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 195 பேர் உயிரிழந்துள்ளனர், 3,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,020 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்