அசாம் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்ட வீட்டின் குளியலறையில் 35 பாம்பு குட்டிகள் இருந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அசாம் மாநிலம் நாகோன் மாவட்டம் கலியாபோர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ஒருவரது வீட்டின் குளியறையில் ஏராளமான பாம்பு குட்டிகள் இருந்துள்ளன. இந்நிலையில் குளியலறைக்கு சென்ற அவர் பாம்பு குட்டிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு, அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.
பின்னர், அப்பகுதியில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர் சஞ்சிப் தேகா என்பவரை வரவழைத்து, அந்த குட்டி பாம்புகள் பிடிக்கப்பட்டன. சுமார் 35 குட்டி பாம்புகள் பிடிக்கப்பட்ட நிலையில், அதனை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.