35.03% வாக்குகள் பதிவு: உத்தரபிரதேச தேர்தல் நிலவரம்!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (14:34 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் நண்பகல் 1 மணி நிலவரப்படி, 35.03% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

 
உத்தரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் பத்தாம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அம்மாநிலத்தில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 
 
உத்தரப்பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் இன்று தொடங்கி 7 கட்ட வாக்குப் பதிவுகள் வரும் ஒரு மாத காலத்தில் நடக்கவுள்ளன. இன்று தொடங்கிய முதல் கட்ட வாக்குப் பதிவு, பாஜக-வுக்கு சோதனைக் களமாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ள மேற்கு உத்தரப் பிரதேசத்தின் 11 மாவட்டங்களில் நடக்கிறது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 58 தொகுதிகளில் வாக்காளர்கள் இன்று வாக்குப் பதிவு செய்கின்றனர்.
 
இன்று வாக்குப் பதிவு நடக்கும் தொகுதிகளில் சில இந்தியத் தலைநகர் டெல்லியை ஒட்டி அமைந்திருக்கக்கூடியவை. நண்பகல் 1 மணி நிலவரப்படி, 35.03% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்