21 வயதில் மேயரான இளம்பெண்: குவியும் வாழ்த்துக்கள்!

Webdunia
வெள்ளி, 25 டிசம்பர் 2020 (18:16 IST)
21 வயதில் மேயரான இளம்பெண்: குவியும் வாழ்த்துக்கள்!
21 வயதில் கேரளாவில் ஒரு இளம் பெண் மேயர் பதவியை ஏற்று உள்ளது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கேரளாவைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன். இவர் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மேயர் வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தேர்தலில் வெற்றிபெற்று தற்போது மேயராகியுள்ளார். இந்திய அரசியல் வரலாற்றில் 21 வயது இளம்பெண் ஒருவர் மேயராவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இளைய தலைமுறைக்கு பெரிய பதவியை கொடுத்து புதிய சாதனை படைத்துள்ளது என அக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
21 வயது இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன் என்பவர் எலக்ட்ரீசியன் ஒருவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சாதாரண தொழிலாளி ஒருவரின் மகளும் மேயராக முடியும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நிரூபித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் ஆர்யா ராஜேந்திரன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 21 வயதில் மேயராகிய ஆர்யா ராஜேந்திரன் அவர்களுக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்