அப்போது இளம்பெண்களுடன் கலந்துரையாடியபோது அடிமை அரசால் எப்படி எல்லாம் நம் உரிமைகளை இழக்கிறோம். சுயமரியாதை மிக்க கழக அரசுகள் அமையவேண்டும். தமிழகம் தனித்தன்மையுடன் திகழ வேண்டும் என்று பேசினார். மேலும் தனக்கு ஆதரவளித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டார். இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுடன் உதயநிதி கலந்துரையாடிய இந்த நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது