கேரளாவில் நிவாரண பணியில் ஈடுபட்ட 2 சமூக சேவகர்கள் எலி காய்ச்சலுக்கு பலி

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (12:15 IST)
கேரளாவில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்த 2 சமூக சேவகர்கள் எலிக்காய்ச்சலால் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழையால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து கேரள மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்பொழுது  எலிக்காய்ச்சல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. 
 
20க்கும் மேற்பட்ட்டோர் எலிக்காய்ச்சலால் பலியாகியிருந்த நிலையில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட சமூக சேவகர்கள் குமாரி(33), சுரேஷ் ஆகிய இருவர் நேற்று எலிக்காய்ச்சலால் பலியாகினர். மேலும் மலப்புரத்தில் 4 பேரும், காசர்கோட்டில் 2 பேரும், பாலக்காட்டில் 2 பேரும் இறந்துள்ளனர். 
இதன் மூலம் இதுவரை எலி காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சல் அறிகுறியிடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எலிக்காய்ச்சலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக  கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்