அடுத்த ஆபத்தில் கேரளா - எலிக்காய்ச்சலால் 12 பேர் உயிரிழப்பு

சனி, 1 செப்டம்பர் 2018 (12:26 IST)
மழை வெள்ளத்தில் இருந்து மீண்டு வரும் கேரள மக்களை எலிக்காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. எலிக்காய்ச்சலால் 12 பேர் பலியாகியுள்ளனர்
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. 483 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் பொதுமக்கள் பலரும் தங்களது உடைமைகளை இழந்து தவித்தனர். லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கேரள மாநிலத்துக்கு இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து 1027 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதி அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இந்த பேரழிவில் இருந்து கேரளா மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்பொழுது  தொற்றுநோய்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. எலிக்காய்ச்சல் பரவி இதுவரை 12 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
பலர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கேரள மக்களை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்