தேர்தல் பணிகளில் ஈடுபட்ட 1900 போலிஸாருக்கு கொரோனா!

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (15:39 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்து வரும் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்ட 1900க்கும் மேற்பட்ட போலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஏப்ரல் 15 முதல் 29 ஆம் தேதி வரை நான்கு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடந்து வருகிறது. இதில் இப்போது இரண்டு கட்டத் தேர்தல் மட்டுமே முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தல் பணிகளில் ஈடுபட்ட 1919 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்