தமிழகத்தில் ஆக்ஸிஜன் கட்டுப்பாட்டு மையம்! – அவசர எண் அறிவிப்பு!

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (15:32 IST)
இந்தியா முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவும் நிலையில் தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவையை கண்காணிக்க தனி கட்டுப்பாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஆக்ஸிஜன் தடுப்பாடு ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ஆக்ஸிஜன் தேவைக்கு உடனடி தொடர்பு கொள்வதற்கான தனி கட்டுப்பாட்டு மையத்தையும் தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

ஆக்ஸிஜன் தேவைப்படும் மருத்துவமனைகள், தனிநபர்கள் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் கால் செண்டர் எண் 104ஐ தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்