சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி.. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு..!

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (12:17 IST)
முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பகுதிகளில் 144 தடை உத்தரவை ஆந்திர மாநில காவல்துறை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
 ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் காவல்துறை உஷார் நிலையில் உள்ளது. 
 
நெல்லூர் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதே போல் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி என்ற பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்