தந்தை இறந்து 12 வருடங்கள் கழித்து மகன்களுக்கு கிடைத்த பணம்.. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே..!

Mahendran
வெள்ளி, 10 மே 2024 (17:52 IST)
தந்தை இறந்து 12 வருடங்கள் கழித்து மகன்களுக்கு 3 கோடி ரூபாய் பணம் கிடைத்தும் அந்த பணம் அவர்களுக்கு பயனில்லாமல் போய்விட்டது. 
 
கோவாவை சேர்ந்த ஜார்ஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் அவரது மகன்கள் வெளிநாட்டில் வசித்து வந்தார்கள். இந்த நிலையில் ஜார்ஜ் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில் அவரது இறுதி சடங்கிற்கு மட்டும் மகன்கள் வந்துவிட்டு அதன் பிறகு மீண்டும் வெளிநாடு சென்று விட்டனர்
 
12 ஆண்டுகளாக அவர்கள் இந்தியா வராத நிலையில் ஜார்ஜ் வீடு பூட்டியே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தந்தையின் சொத்துக்களை விற்பனை செய்வதற்காக மகன்கள் வெளிநாட்டிலிருந்து கோவாவுக்கு வந்த நிலையில் தந்தை வசித்த பூர்வீக வீட்டில் என்னென்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தனர் 
 
அப்போது வங்கி லாக்கர் சாவிகள் மற்றும் சில ஆவணங்கள் இருந்ததை அடுத்து வங்கிக்கு சென்று நடைமுறைகளை முடித்து வங்கி லாக்கரை திறந்து பார்த்தபோது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தது என்பதும் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் பணம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் அவை அனைத்தும் காலாவதியான பழைய ஆயிரம் ரூபாய் என்பதுதான் பெரும் அதிர்ச்சி. அந்த நோட்டுகள் மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த நோட்டுகள் எதுவும் மகன்களுக்கு உதவாது என்ற தகவல் தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜார்ஜ் கஷ்டப்பட்டு தனது மகன்களுக்காக சேர்த்து வைத்த பணம் தற்போது யாருக்கும் பயன்படாமல் போய்விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகள் அந்த லாக்கரில் இருந்தது மட்டும் மகன்களுக்கு ஆறுதலை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது’
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்