கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 11265 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Webdunia
புதன், 14 ஏப்ரல் 2021 (19:30 IST)
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8000ஐ நெருங்கி உள்ள நிலையில் நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கர்நாடகாவில் இன்று பேர் கொரோனா வைரஸால் 11265 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதில் பெங்களூரில் மட்டும் 8155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
மேலும் இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 என்றும் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4364 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கர்நாடக மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1094912 என்றும் மொத்தம் குணமடிந்தவர்கள் எண்ணிக்கை 996367 என்றும் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 13046 என்றும் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 85480 என்றும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்