பிறந்தநாள் வாழ்த்துக்கள் சினேகா!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (06:47 IST)
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை இருந்தவர் சினேகா என்பதும் அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
நடிகை சினேகா தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை சினேகா கடந்த 2000ம் ஆண்டு என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் 
 
குறிப்பாக அவர் நடித்த ஆட்டோகிராப், ஆனந்தம் போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகை சினேகாவுக்கு வெப்துனியா சார்பில் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்