பாசிட்டிவ் விமர்சனங்களை பெறும் சியான் விக்ரமின் ‘மஹான்’

வியாழன், 10 பிப்ரவரி 2022 (10:41 IST)
பாசிட்டிவ் விமர்சனங்களை பெறும் சியான் விக்ரமின் ‘மஹான்’
விக்ரம் நடித்த ‘மஹான்’ திரைப்படம் நேற்று இரவு அமேசான் ஓடிடியில் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படம் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது 
முன்னணி ஊடகங்கள் அனைத்துமே ‘மஹான்’ படத்திற்கு பாசிட்டிவாக விமர்சனங்கள் அளித்து உள்ளது என்பதும் மூன்று ஸ்டார்களுக்கும் மேல் விமர்சன புள்ளிகள் கொடுத்து உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரமுக்கு மிகச்சரியான கேரக்டர் கிடைத்துள்ளது என்றும் அதை அவர் மிகச் சரியாக பயன்படுத்தி உள்ளதாகவும் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர் 
 
அதேபோல் துருவ் விக்ரம் எண்ட்ரி, கேரக்டர் ஆகியவை சூப்பராக இருப்பதாகவும் கடைசி ஒரு மணி நேரம் படம் சீட் நுனியில் உட்கார வைக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக  இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்த படத்தின் ஒரே மைனஸ் படத்தின் நீளம் தான் என்றும் முதல் பாதி சற்று மெதுவாக செல்கிறது என்றும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரமுக்கு வெற்றிப்படமக ‘மஹான்’அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
‘மஹான்’, விக்ரம், விமர்சனம்,

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்