கமலின் 'விக்ரம்' பட சூப்பர் அப்டேட்.... ரசிகர்கள் மகிழ்ச்சி

புதன், 9 பிப்ரவரி 2022 (16:45 IST)
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் 'விக்ரம்' திரைப்படம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.

உலகநாயகன் கமலஹாசன் நடித்து தயாரித்து வரும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தில் கமலோடு விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இப்போது மீண்டும் சென்னையில் நடந்து வந்தது. அங்கு சண்டைக் காட்சிகளை படமாக்கி வந்தார் லோகேஷ் கனகராஜ். இப்போது படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் படத்தில் கமலின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் கமல் போலிஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்க் இம்மாதத்திற்குள் முடியவுள்ளதாகவும், இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி  வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.#Vikram

#Vikram - Final schedule to be wrapped up by this month.. ✌️

April 29 Release is being planned..

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்