மகான் படக்குழுவினருடன் டிடி - கவனத்தை ஈர்க்கும் புகைப்படங்கள்!

புதன், 9 பிப்ரவரி 2022 (19:36 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மஹான்.  மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் துருவ் விக்ரம், வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த், தீபக் பரமேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
 
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் கேங்ஸ்டர் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நாளை  அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி இயங்குதளத்தில் வெளியாகவுள்ள இப்படக்குழுவினரை தொகுப்பாளினி டிடி நேர்காணல் எடுத்துள்ளார். 
அப்போது விக்ரம், சியான் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள டிடி, " இந்த இன்டெர்வியுவிற்கு பிறகு நான் கென்னி சாரிடம் கேட்டேன், நான் உங்களுடன் ஒரு போட்டோ எடுக்கலாமா சார்? என்று அவர் உடனடியாக சம்மதித்தது மட்டுமல்லாது அவரது டீமிடம் ஒரு கருப்பு சட்டையை எனக்கு கொண்டு வரச் சொன்னார்.  
அதை அருகிலுள்ள ஆண்கள் அறையில் மாற்றியமைத்து, இந்த மறக்கமுடியாத புகைப்படங்களை என்னிடம் கொடுத்தார்… அது கென்னி சார் உங்களுக்காக, அவர் அதை ஒரு நங்கூரத்திற்காக செய்ய வேண்டியதில்லை, ஆனால், இன்னும் அவர் அதைச் செய்தேன் … நன்றி ஐயா, மகான் ரிலீஸுக்கு முன்பு சியான் விக்ரம்  மற்றும் அன்பான துருவ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்