நேற்று ஏற்றம், இன்று இறக்கம்.. பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தால் முதலீட்டாளர்கள் குழப்பம்..!

Siva
வியாழன், 25 ஜனவரி 2024 (10:03 IST)
பங்குச்சந்தையின் சென்செக்ஸ் நேற்று 500 புள்ளிகள் வரை உயர்ந்த நிலையில் இன்று திடீரென 300 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

பங்கு சந்தை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் திடீரென 1300 புள்ளிகள் இறங்கியும் அதன் பின்னர் திடீரென 800 புள்ளிகள் உயர்ந்தும் என மாறி மாறி பங்குச்சந்தை வர்த்தகம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 343 புள்ளிகள் குறைந்து 70 ஆயிரத்து 715 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு நிப்டி 87 புள்ளிகள் சார்ந்து 21 ஆயிரத்து 366 என வர்த்தகமாகி வருகிறது.

பட்ஜெட் வரை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் பட்ஜெட்டுக்கு பிறகு பங்கு சந்தை உச்சம் செல்ல வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்