படு பாதாளத்திற்கு சென்ற சென்செக்ஸ்.. 2 நாட்களில் 2000 புள்ளிகள் சரிவு..!

Siva

வியாழன், 18 ஜனவரி 2024 (10:44 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்று திடீரென 1600-க்கும் மேற்பட்ட புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்தது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
 இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 500 புள்ளிகள் சரிந்துள்ளது. இரண்டு நாட்களில் 2000 புள்ளிகள் சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்  
 
நேற்று படுவீழ்ச்சி அடைந்த பங்கு சந்தை இன்று காலையும் சரிவுடன் தான் தொடங்கியது. சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 420 புள்ளிகள் சரிந்து 71982 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 150 புள்ளிகள் சார்ந்து  21,423 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.  கடந்த இரண்டு நாட்களில் பங்குச் சந்தை பெரும் சரிவு ஏற்பட்டதை அடுத்து முதலீட்டாளர்கள் அச்சமடைந்தாலும் விரைவில் பங்குச்சந்தை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்