வாரத்தின் முதல் நாளே சரிந்த பங்குச்சந்தை.. மீண்டும் ஏற்றம் காணுமா?

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (09:32 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் கடந்த வெள்ளி அன்று திடீரென 800 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் குறைந்தது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியதை அடுத்து மீண்டும் ஏற்றம் காணுமா என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ளது 
 
சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 66 ஆயிரத்து 631 என்ற புள்ளிகளில் வர்த்தக பாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 13 புள்ளிகள் சரிந்து 19,732 என்ற  புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது 
 
பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு லாபத்தை புக் செய்வதால் தற்காலிகமாக பங்குச்சந்தை குறைந்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்