ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. ஒரே நாளில் 720 ரூபாய் குறைந்தது..!

Mahendran
சனி, 14 டிசம்பர் 2024 (11:36 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை 720 ரூபாய் குறைந்திருப்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து ரூபாய்   7,140 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 720 குறைந்து ரூபாய்  57,120 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,797 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,376 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்