ஏற்கனவே வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி, தற்போது வலுவிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக தமிழகத்தில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், அது தமிழ்நாடு நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.