சரக்கை தண்ணீர் கலக்காமல் அடிப்பதாக சவால்! பாட்டில் பாட்டிலாக குடித்த இளைஞர் பரிதாப பலி!

Prasanth Karthick

வியாழன், 1 மே 2025 (13:23 IST)

கர்நாடகாவில் மதுவில் தண்ணீர் கலக்காமல் குடிப்பதாக சவால் விட்டு குடித்த இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் கார்த்திக். இவருக்கு கடந்த ஆண்டு திருமணமான நிலையில் கடந்த வாரம்தான் இவரது மனைவி ஒரு குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.

 

இந்நிலையில் கார்த்திக் தனது நண்பர்களான வெங்கட ரெட்டி, சுப்பிரமணி உள்ளிட்டோருடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் தண்ணீர் கலக்காமல் ராவாக மதுவை அருந்துவது குறித்து பேச்சு ஏற்பட, கார்த்திக் தான் தண்ணீர் கலக்காமல் மது அருந்துவதாக பந்தயம் கட்டியுள்ளார்.

 

அதை தொடர்ந்து தண்ணீர் கலக்காமல் ராவாக 5 பாட்டில் மதுவையும் குடித்துள்ளார் கார்த்திக். இறுதியில் மிகவும் போதையாகி நிலைத்தடுமாறி மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரது உடல் உள்ளுறுப்புகள் செயலிழக்க தொடங்கியதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் வெங்கட ரெட்டி, சுப்ரமணியை கைது செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்