மீண்டும் தங்கம் விலை 500 ரூபாய் உயர்ந்ததா? சென்னையில் இன்றைய நிலவரம்..!

Mahendran
சனி, 6 ஜூலை 2024 (10:11 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் கிட்டத்தட்ட ஒரு சவரனுக்கு 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,820 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 480 உயர்ந்து ரூபாய் 54,560 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,290 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,320 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 99.30 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 99,300.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
தங்கம் விலை இன்னும் படிப்படியாக உயரவே வாய்ப்பு இருப்பதாகவும் இன்னும் ஒரு சில வருடங்களில் ஒரு கிராம் ரூ.10000 என்ற அளவில் விற்பனை செய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தங்க நகை கடைக்காரர்கள் மற்றும் வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
எனவே இப்போது முதலே பணம் கையில் இருக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக தங்கத்தை வாங்கி சேமித்து கொண்டால் பிற்காலத்தில் நல்ல லாபத்துடன் விற்பனை செய்யலாம் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்