இன்று ஒரே நாளில் 200 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. வாங்குவதற்கு சரியான நேரமா?

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (10:06 IST)
இஸ்ரேல் நாட்டில் போர் நடந்ததால் கடந்த சில நாட்களாக  தங்கம் விலை ஏறிய நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து உள்ளது. இன்றைய விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூபாய் 5530.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 குறைந்து  ரூபாய் 44240.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6000.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48000.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூபாய் 77.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்