கையில் 5 கிராம் குட்கா வைத்திருந்தால் கூட நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் , குட்கா வாங்கிய இடம் வரை கூண்டோடு சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கஞ்சாவை தொடர்ந்து குட்கா, பான் மசாலா, கூல் லிப் போன்றவற்றை முற்றிலுமாக ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் அருகே நடைபெறும் விற்பனையை முற்றிலும் கட்டுப்படுத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.