கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று இரவு முதல் சென்னையில் உள்ள முக்கிய பகுதிகள் ஆன சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, தி.நகர், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது