ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம்..!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (10:16 IST)
தங்கம் வெள்ளி கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் நேற்றும், நேற்று முந்தினமும் திடீரென சரிந்தது. இதனை அடுத்து தங்கம் வாங்குவதற்கு சரியான நேரம் இதுதான் என தங்க நகை முதலீட்டாளர்கள் தெரிவித்திருந்தனர் இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் திடீரென உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 29 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5446.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 232 உயர்ந்து ரூபாய் 43568.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5909.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47272.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம்  ரூபாய் 75.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 75700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்