இந்திய பங்குச் சந்தை நேற்று மிக மோசமாக இருந்த நிலையில் முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்ததாக கூறப்பட்டது. அமெரிக்க அதிபராக டொனால்ட் பதவியேற்ற உடன் வெளியிட்ட சில அறிவிப்புகள் தான் நேற்றைய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், நேற்றைய பயங்கர சரிவுக்கு பின் இன்று மீண்டும் பங்குச் சந்தை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 296 புள்ளிகள் உயர்ந்து 76 ஆயிரத்து 132 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 65 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 89 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் சன் பார்மா, இன்போசிஸ், விப்ரோ, ஐடிசி, டிசி.எஸ், ஹெச்டி.ஏஃப்சி பேங்க், பாரதி ஏர்டெல், மாருதி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வருகிறது. அதேபோல், சிப்லா, ஸ்டேட் வங்கி, அப்போலோ ஹாஸ்பிடல், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.