சஞ்சு சாம்சன் கடந்த 10 இன்னிங்ஸ்களில் 3 சதங்களை விளாசியுள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பை அவர் தக்கவைத்துக் கொண்டுள்ளார். அதனால் இப்போதைக்கு ரிஷப் பண்ட், இஷான் கிஷான் மற்றும் கே எல் ராகுல் ஆகியோருக்கு டி 20 அணியில் இடமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.