ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இரண்டாவது போட்டி வரும் 25 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில் இந்த போட்டியைக் காண வரும் ரசிகர்கள் சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.