டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்ய, மலேசியா அணி பேட்டிங் செய்தது. முதல் ஓவரில் இருந்து இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சு அனல் பறந்த நிலையில் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 14.3 ஓவர்களில் 31 ரன்களுக்கு மலேசிய அணி ஆட்டம் அழைத்தது. அந்த அணியில் ஒருவர் கூட இரட்டை இலக்க ரன்களை எடுக்கவில்லை என்பதும் நான்கு பேர் டக் அவுட் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.