பங்குச்சந்தை கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சரிந்து கொண்டே வரும் நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளில் மீண்டும் மிக மோசமாக சரிந்து உள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கிய முதல் சரிவில் இருந்து வருகிறது. சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 84 புள்ளிகள் சரிந்து 74,053 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 243 புள்ளிகள் சரிந்து 22,251 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஐடிசி, மாருதி, சிப்லா, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் போன்ற ஒரு சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளன.
அதேபோல், கோடக் மகேந்திரா வங்கி, ஆசியன் பெயிண்ட், டைட்டான், ஹிந்துஸ்தான் லீவர், ஹீரோ மோட்டார்ஸ், பிரிட்டானியா, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல், அப்பல்லோ ஹாஸ்பிடல் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை சரிவு காரணமாக ஏற்கனவே இலட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்துள்ள முதலீட்டாளர்கள் இன்னும் அதிக நஷ்டத்தில் அடைந்து வருவதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், ஒரு சிலர் பங்குச்சந்தையில் இருந்து வெளியேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.