பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

Siva

செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (11:32 IST)
பங்குச்சந்தை கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சரிந்து கொண்டே வரும் நிலையில், இன்றும் பங்குச்சந்தை சரிந்துள்ளது. இதை அடுத்து, இந்த சரிவுக்கு முடிவே இல்லையா என முதலீட்டாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

இன்று காலையும் பங்குச்சந்தை வர்த்தகம் ஆரம்ப முதலே சரிவில் இருந்து வருகிறது.  மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 373 புள்ளிகள் சரிந்து 75 ஆயிரத்து 620 என்ற புள்ளிகளில்  வர்த்தகமாகி   வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 127 புள்ளிகள் சரிந்து 22,832 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச் சந்தையில், அப்போலோ ஹாஸ்பிடல், டெக் மகேந்திரா, ஹெச் சி எல் டெக்னாலஜி, மாருதி, இன்ஃபோசிஸ், கோடக் மகேந்திரா வங்கி ஆகிய சில பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளன.

ஆக்சிஸ் வங்கி, சிப்லா, ஸ்டேட் வங்கி, டி சி எஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், பாரதி ஏர்டெல், ஐடிசி, டைட்டான், ஹீரோ மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, பிரிட்டானியா உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வருவதால், முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடிகளை இழந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்