வாரத்தின் முதல் நாளே அமோகம்.. சென்செக்ஸ், நிப்டி உயர்வு..!

திங்கள், 11 செப்டம்பர் 2023 (10:40 IST)
இந்த வாரத்தின் முதல் நாளே அமோகமாக பங்குச்சந்தை உயர்ந்திருப்பது அதில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. 
 
இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 330 புள்ளிகள் உயர்ந்து 66 ஆயிரத்து 936 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 115 புள்ளிகள் உயர்ந்து 19936 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.  
 
வாரத்தின் முதல் நாளே பங்கு சந்தை உயர்ந்துள்ளதால் இந்த வாரம் முழுவதும் பங்கு சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்