பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (11:33 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று காலை மும்பை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து ஏற்றத்தில் இருந்தது என்பதும் சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்ந்து 64,439 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 19778 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும்  சராசரியாக உயர்ந்து கொண்டே இருப்பது முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்னும் பங்குச்சந்தை நீண்டகால அடிப்படையில் உயரவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்