மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (10:50 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் நேற்று பங்குச்சந்தை சரிவில் தொடங்கினாலும் ஏற்றத்தில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்றைய ஏற்றம் இன்றும் தொடர்கிறது. இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்ந்து 65 ஆயிரத்து 763 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 43 புள்ளிகள் உயர்ந்து 19572 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது 
 
தொடர்ச்சியாக பங்குச் சந்தை உயர்ந்து வருவது அதில் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் எப்போது வேண்டுமானாலும் பங்குச்சந்தை இறங்கலாம் என்பதால் புதிதாக முதலீடு செய்பவர்கள் கவனத்துடன் முதலில் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்