பங்குச்சந்தை மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

புதன், 6 செப்டம்பர் 2023 (10:20 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று சரிவுடன் முடிந்தது என்பதும் இதனை அடுத்து இன்றும் பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 40 புள்ளிகள் சார்ந்து 65 ஆயிரத்து 749 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 5  புள்ளிகள் மற்றும் சார்ந்து 19,571 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது 
 
 இந்த வாரம் முதல் நாளில் பங்குச்சந்தை ஏற்றமாகவும் அடுத்த இரண்டு நாள்களும் சரிவுடன் இருப்பதை அடுத்து இனிவரும் நாட்களிலும் ஏற்ற இறக்கத்துடன்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்