இந்திய பங்குச்சந்தை கடந்த மூன்று நாட்களாக சரிவில் இருந்த நிலையில் இன்று பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது
கடந்த திங்கள் செவ்வாய் புதன் ஆகிய மூன்று நாட்களும் பங்குச்சந்தை சரிந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர். இந்த நிலையில் இன்று மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் சுமார் 230 புள்ளிகளை உயர்ந்து 59 ஆயிரத்து 800 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி சுமார் 60 புள்ளிகள் உயர்ந்து 17,676 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்