திடீரென 750 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
திங்கள், 17 ஏப்ரல் 2023 (09:45 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று திடீரென 750 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் தொடங்கி உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சற்று முன் பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சற்று முன் 755 புள்ளிகள் சரிந்து 59,675 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 189 புள்ளிகள் சரிந்து 17638 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. இன்று திடீரென பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது