இரண்டாவது நாளாக சரிந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (09:55 IST)
இந்திய பங்குச் சந்தை நேற்று 500 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது என்பதும் குறிப்பாக ஐடி துறையின் முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் நேற்று குறைந்தபட்ச விலைக்கு வர்த்தகமானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் சரிந்து உள்ளதால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இன்று காலை 9 மணிக்கு பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 810 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிப்டி 25 புள்ளிகள் சார்ந்து 17,680 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. பங்குச்சந்தை இன்னும் சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் எனவே முதலீடு செய்பவர்கள் கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்